![]() |
யாழில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கையகப்படுத்தும் நடவடிக்கையில் படையினரும்,கடற்படையினரும்! | ||
| [ திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட், 2012, ] | ||
வலிகாமம் வடக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலையமாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிளை மீண்டும் கையகப்படுத்தும் முயடற்சியில் சிறிலங்கா படையினரும், கடற்படையும் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
மிக நீண்ட காலமாக சிறிலங்கா படையின் உயர் பாதுகாப்பு வலையம் என்னும் போர்வைக்குள் மூடிவைக்கப்பட்டிருந்த வலிகாமம் வடக்குப் பகுதி மக்களின் மிகுந்த போராட்டத்தின் மத்தியில் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் கீரிமலை, செம்மண்காடு போன்ற பகுதிகளும் விடுவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள மக்களுடைய இறுதிக்கிரியைகள் நடாத்தும் மயானப் பகுதி விடுவிக்கப்படாமல் சிறிலங்கா கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் வலிகாமம் வடக்குப் பிரதேச சபை உறுப்பினர்களுடைய உதவியுடன் அப்பகுதியில் இருந்த கடற்படை முகாமிற்கு முன்னால் மக்கள் திரண்டு இறந்த ஒருவருடைய சடலத்துடன் நின்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தினர். இதனால் குறித்த மயானம் மக்களுடைய பாவனைக்காக விடுவிக்கப்பட்டது. ஆனாலும் சில மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இம் மயானத்தினை பாயன்படுத்த கடற்படையினரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதற்கான காரணத்தினை கடற்படையினரிடம் கேட்ட போது அரச ஒட்டுக் குழு அமைச்சர் டக்ளஸ் வந்து குறித்த மயானத்தினை பயன்படுத்த திறந்து வைக்கவுள்ளார், அவர் வரும்வரை பொது மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவித்திருந்தானர். இருப்பினும் கடந்த மாதம் கீரிமலை நகுலேஸ்வரக் குருக்களின் மனைவியார் இறந்ததை அடுத்து குறித்த மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் நேற்று குறித்த பகுதியில் இறந்தஒருவருடைய சடலம் குறித்த மயானத்திற்குக் அடக்கம் கொண்டு செல்லப்பட்ட போது இடைமறித்த கடற்படையினர் அங்கு செல்வதற்கு அனுமதியில்லை, அது உயர் பாதுகாப்பு வலையம், பொது மக்கள் பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த சடலம் அப்பகுதியில் இருந்த தனியார் காணி ஒன்றினுள் அடக்கம் செய்யப்பட்டது. எங்களுடைய நிலத்தினை பிடித்து வைத்துக் கொண்டு எங்களுடை இறுதிக் கிரியைகளைக் கூட நடத்த முடியாத அளவு சிறிலங்கா படையினரும், கடற்படையினரும் தமது காட்டுமிராண்டித் தனத்தினை காட்டு கின்றனர் என்று அப்பகுதிமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் (17/05/2013)
|
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
|
Published news: |
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|
இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை! (09/05/2013)
|
9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை (09/05/2013)
|


வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!









