![]() |
பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய கொடூர தாய் | ||
| [ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட், 2012, ] | ||
பெற்ற குழந்தையை தாய் ஒருவரினால் கொடுமைபடுத்திய சம்பவம் ஒன்று வெல்லவாய, வதினகொலயாய பிரதேசத்தில் நடந்துள்ளது. ஆறு வயது சிறுவனின் இரண்டு கால்களில் தீ காயங்களை ஏற்படுத்தி, அவரது கண்களில் மிளகாய் தூளை போட்டு கொடூரமான முறையில் சித்ரவதை செய்த தாய் ஒருவரை, வெல்லவாய காவற்துறையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். . வெல்லவாய, வதினகொலயாய பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவிருந்தார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவன் அயல் வீட்டுப்பிள்ளைகளுடன் அடிக்கடி விளையாட செல்வதால், தான் இவ்வாறு தண்டித்ததாக பெண், காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். சிறுவனின் தந்தை வேறு ஒரு பெண்ணை மணமுடித்துள்ளதுடன், தாயும் வேறு ஒருவரை மணம் முடித்துள்ளதாகவும் அவருக்கு இரண்டு வயதிலும் மற்றுமொரு மகன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கணவருக்கு பிறந்த 6 வயதான சிறுவனை, குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான சித்ரவதைக்கு உள்ளாகி வந்துள்ளதாக அயலவர்கள் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு (23/05/2013)
|
கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி! (23/05/2013)
|
பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (23/05/2013)
|
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|


தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு









