![]() |
ரஷ்யாவில் 10 ஆண்டுகளாக பாதாள சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 சிறுவர்கள்! | ||
| [ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட், 2012, ] | ||
ரஷ்யாவில் 1 முதல் 17 வயதுள்ள 27 சிறுவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பாதாள அறையில் உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள டாட்டார்ஸ்டான் மாகாணத்தின் கஜான் நகரைச் சேர்ந்தவர் பைஸ்ரஹ்மான் சடாரோவ் வயது 83.
தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று சொல்லிக் கொள்ளும் அவர் தனது ஆதரவாளர்களை உலக நடப்பில் இருந்து விலகி இருக்குமாறு தெரிவித்தார். இதையடுத்து கடந்த 2000ஆம் ஆண்டு கஜானில் உள்ள ஒரு வீட்டுக்கு அடியில் பாதாள அறைகள் கட்டப்பட்டு 70 ஆதரவாளர்கள் அதில் குடியேறினர்.
இதில் 1 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அடக்கம். அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூரிய ஒளியைக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பாதாள அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதை ரஷ்யாவின் வெஸ்டி என்ற தொலைக்காட்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இங்கு இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் அமைதியான முறையில் வசித்து வருகின்றனர். கஜான் நகரில் தான் 2018ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை (18/05/2013)
|
இனி ஆடைகளை தெளித்துக்கொள்ளலாம்.... கண்டுபிடிக்கப்பட்டது உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் (19/05/2013)
|
தேனிலவை படம் பிடித்து விற்பனை செய்த கணவன் (19/05/2013)
|
பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை! (17/05/2013)
|
சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை (15/05/2013)
|
சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை (14/05/2013)
|


போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை









