web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பெரம்பூரில் வீடு புகுந்து, அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி: மனைவி கண் எதிரே பயங்கரம்

[ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட், 2012, ]
பெரம்பூரில் வீடு புகுந்து,
பெரம்பூர் முத்துக்குமாரசாமி முதல் தெருவில் வசித்து வந்தவர் கேசவன் (32). ஆட்டோ டிரைவரான இவருக்கும் இவரது தம்பி குட்டிக்கும் இடையே தங்களது வீட்டுக் குழாயில்தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலையில், கேசவனின் மனைவி சரண்யா தண்ணீர் பிடிக்கும்போது குட்டி தகராறில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் இரவில் பூதாகரமாக வெடித்தது. நேற்று இரவு 9.30 மணி அளவில் கேசவன், மனைவி சரண்யா, மாமியார் மணி மேகலை மற்றும் 2 மாத கைக்குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது குட்டியும், அவரது நண்பர் சீனிவாசனும் சென்று கேசவனின் வீட்டு கதவை தட்டினர். மாமியார் மணிமேகலை கதவை திறந்தார். அப்போது 2 பேரும் கையில் பெரிய கத்தியுடன் நின்று கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா, எனது கணவரை ஒன்றும் செய்து விடாதீர்கள் என கூறி அவர்களின் காலில் விழுந்து கதறினார். ஆனால் குட்டியும், சீனிவாசனும் கண்டுகொள்ளாமல் கேசவனை சரமாரியாக வெட்டினர். இதில் கை துண்டானது. உடலின் மற்ற இடங்களிலும் அரிவாள் வெட்டு விழுந்தது.

சம்பவ இடத்திலேயே கேசவன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்து சரண்யா கதறினார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கேசவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவரை வெட்டும் போது தனது கைக்குழந் தையை கையில் வைத்துக் கொண்டே சரண்யா பேராடியுள்ளார். இதில் குழந்தையின் காலிலும் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டது. கேசவனை வெட்டிய போது, குறி தவறி குட்டி மீதும் வெட்டு விழுந்துள்ளது. இந்த காயத்துடன் 2 பேரும் தப்பிச் சென்றனர். இருவரில் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.

குட்டி தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய செம்பியம் இன்ஸ்பெக்டர் கமீல்பாஷா தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர். அண்ணன்-தம்பி தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
  திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி   (24/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு   (22/05/2013) 
Published news:
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013)
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013)
  ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது   (18/05/2013)
  மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!   (18/05/2013)
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013)
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013)