web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

பிரிட்டிஷ் கொடிக்கு சமமாக பறந்த தமிழீழத் தேசியக் கொடி- அதிருப்தியில் இலங்கை!

[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட், 2012, ]
பிரிட்டிஷ் கொடிக்கு சமமாக
லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பிரசார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு பிரிட்டன் இடமளித்திருப்பது

தொடர்பில் இலங்கை கடும் அதிருப்திக்குள்ளாகி இருப்பதாகத் தெரியவருகிறது.

அத்துடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாராளமாகப் பறப்பது குறித்தும் இலங்கை அரசு கடும் விசனம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள் இங்கிலாந்தில் வசிக்கும் எந்தவொரு நபரும் அரசியல் கருத்துகளையோ வேறெந்த நாடுகளின் பிரச்சினைகளை முன்னிறுத்திச் செயற்படவோ அனுமதிக்கப் போவதில்லை யென முன்னதாகப் பிரிட்டன் அறிவித்திருந்தது.

ஆனால் நேற்று முன் தினம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் ஒலிம்பிக் கிராமம் ஒன்றிற்கருகில் ஸ்ட்ராட் பேர்ட் என்னுமிடத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர்.

அத்துடன், பிரிட்டிஷ் தேசியக் கொடிக்கருகில் தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றியிருந்த எதிர்ப்பாளர்கள், ஒலிம்பிக் நிகழ்வில் இலங்கை வீரர்கள் பங்கு பற்றுவதைத் தடைசெய்ய வேண்டுமெனவும், போர்க்குற்றங்களை விசாரிப்பதுடன், லண்டனில் அகதிகளாக இருப்பவர்களைத் திருப்பி அனுப்பக்கூடா தென்றும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் இவ்வாறான சுதந்திரமான செயற்பாடுகளுக்குப் பிரிட்டிஷ் அரசு அனுமதி வழங்குவது தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள இலங்கை அரசு இது தொடர்பான தனது ஆட்சேபத்தை இராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக மேலும் அறியமுடிகின்றது.


இலங்கை அரசின் இந்த அதிருப்தியை இலங்கை வெளிவிவகார அமைச்சு கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்திடம் வெளிப்படுத்துமென மேலும் தெரியவருகிறது

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
Published news:
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)