![]() |
படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்ல திட்டம்: புதுச்சேரியில் 6 இலங்கை தமிழர்கள் சிக்கினர் | ||
| [ வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட், 2012, ] | ||
புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து படகு மூலம், ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமிட்ட, ஆறு இலங்கை தமிழர்கள் சிக்கினர்.
புதுச்சேரியை அடுத்த பெரிய காலாப்பட்டு பங்களா தெருவில் உள்ள ஒரு வீட்டில், இரவில் அடிக்கடி ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதனை அப்பகுதி மக்கள், போலீசுக்கு தெரிவித்தனர். அந்த வீட்டை, நேற்று முன்தினம் இரவு, காலாப்பட்டு போலீசார் சுற்றி வளைத்தனர்.
தப்பி ஓட்டம்: போலீசாரை கண்டதும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக, மூன்று பேர், தப்பி ஓடி விட்டனர். வெவ்வெறு அறைகளில் இருந்த, ஐந்து வயது சிறுவன் உட்பட, ஆறு பேரை, துப்பாக்கி முனையில், போலீசார் சுற்றி வளைத்தனர்.விசாரணையில் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த நந்தகோபன், தயாகரன், சிவகங்கை அகதி முகாமை சேர்ந்த மாத்யூஸ், திருப்பூர் அகதி முகாமை சேர்ந்த சசிகரன், கீழ்புத்துப்பட்டு அகதி முகாமை சேர்ந்த இந்திரஜித் ஆகியோர் என, தெரியவந்தது.
ஜி.பி.எஸ்., உலக வரைபடம் பறிமுதல்: தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள், ஒரே வீட்டில் இருந்தது ஏன் என, போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில், பிடிபட்டவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள், காலாப்பட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீவிர விசாரணையில், அவர்கள், புதுச்சேரியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல இருப்பது தெரிய வந்தது. மேலும் இதே போல் பலர், பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பிலும், வாடகை வீடு எடுத்து தங்கி இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டவர்களிடமிருந்து, ஒரு உலக வரைப்படம், ஜி.பி.எஸ்., மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
25 பேர் தப்பி ஓட்டம்: அதிர்ச்சியடைந்த போலீசார் சுனாமி குடியிருப்பு வீடுகளை சோதனையிட்ட போது, அங்கிருந்த, 25 பேரும், ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டனர்.
சதித் திட்டம் தீட்டியது யார்? இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க, இலங்கையைச் சேர்ந்த ஏஜென்ட் ஜனா புரோக்கராகவும், மூளையாகவும் செயல்பட்டு வந்துள்ளான். இவனிடம், 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை, இலங்கை அகதிகள் பணம் கொடுத்து, ஆஸ்திரேலியா செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு ஜனா சொந்த செலவில் மொபைல்போன், சிம்கார்டுகள் வாங்கி தந்துள்ளான். முதலில், கேரள கடற்கரை வழியாக ஆஸ்திரேலியா தப்பி செல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அங்கு போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருந்ததால், புதுச்சேரி கடல் வழியாக, ஆஸ்திரேலியா அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள், படகு மூலம் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்து விடுவதாக, ஜனா கெடு விடுத்திருந்தான் . இதற்காகவே, பல்வேறு அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் வீடு எடுத்து ஒன்றாக தங்கியுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
யார் இந்த ஜனா? ஜனா எந்த ஊரில் தங்கியுள்ளான் என, இலங்கை அகதிகளுக்கு தெரியவில்லை. அவனை யாரும் இதுவரை சரியாக பார்த்தது கூட கிடையாது. அவ்வப்போது மொபைல் போன் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இவன் மூலம் ஆஸ்திரேலியா, ஓமன் நாட்டிற்கு பலர் சென்றுள்ளனர். அப்படி சென்றவர்கள் பலர், தங்களுடைய உறவினர்களுக்கு ஜனாவின் மொபைல் எண் கொடுத்துள்ளனர்.
உளவு துறை விசாரணை: பிடிபட்ட இலங்கை அகதிகளிடம் புலனாய்வு, உளவு துறை, தமிழ் நாடு கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை அகதிகள் தப்பிச் செல்ல சதித் திட்டம் தீட்டிய ஜனாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|
வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! (20/05/2013)
|
வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு! (20/05/2013)
|
வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் (20/05/2013)
|
யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! (19/05/2013)
|
பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! (19/05/2013)
|
|
Published news: |
11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! (14/05/2013)
|
மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை (13/05/2013)
|
நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது (13/05/2013)
|
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|


காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்









