web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

ரிசாட் பதியூனின் மிரட்டல் நிரூபணமானால் சட்ட நடவடிக்கை

[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூலை, 2012, ]
ரிசாட் பதியூனின் மிரட்டல்
மன்னார், நீதிவான் தமக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மன்னார் காவற்துறையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டமுறைப்பாட்டையடுத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் காவற்துறை அத்தியட்சகர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின்படி, முன்னைய சந்தர்ப்பங்களிலும் நீதவானுக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நீதித்துறைச் செயற்பாடுகளில் தலையிட்டிருப்பதாகவும், முறையிடப்பட்டுள்ளது. மேலும், மன்னார் நீதவானை இடமாற்றுவதற்கான முயற்சிகளிலும் அமைச்சர் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில், நாட்டின் நீதித்துறையில் அரசியல்வாதிகளின் நேரடித் தலையீடுகளைக் கண்டித்து சட்டத்தரணிகள் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையிலேயே ஜனாதிபதியின் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தொலைபேசி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவை காவற்துறையினர் பெற்றுள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்டமாக தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட தகவல்கள் ஆராயப்பட்டு, அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டு உறுதியானால், அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது அதிகாரபூர்வ தொலைபேசி இலக்கத்தில் இருந்தே நீதிவானின் கைத்தொலைபேசிக்கு அழைத்துள்ளதாக அறியப்படுவதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் நீதவானை அச்சுறுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை சம்பந்தப்பட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
  பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!   (19/05/2013) 
Published news:
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)
  சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு   (10/05/2013)
  கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது   (10/05/2013)