![]() |
சருமம் பளபளப்பாக பழம், காய்கறி சாப்பிடுங்க!: ஆய்வில் தகவல் | ||
| [ வியாழக்கிழமை, 19 யூலை, 2012, ] | ||
பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு சருமம் பளபளப்பாக மாறும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் பழங்கள், காய்கறிகளில் உள்ள கரோட்டினாய்டுகள், நிறமிகள் சருமத்தின் நிறத்தை பொலிவுறச்செய்கின்றன. அது மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கச்செய்கிறது என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 35 மாணவர்கள் பங்கேற்றனர் அவர்களுக்கு உணவாக பழங்களும், காய்கறிகளும் வழங்கப்பட்டன. 6 வாரங்களில் அவர்களின் சருமத்தை பரிசோதனை செய்தபோது சருமத்தில் பளபளப்பு அதிகரித்து இருந்தது தெரியவந்தது. இந்த ஆய்வு குறித்து கருத்து கூறியுள்ள ஆய்வாளர், பழங்கள், காய்கறிகளை உண்பவர்களுக்கு சருமம் பொன்நிறமாக மாறும் என்று கூறினார். அவர்கள் தங்களின் சருமத்தில் ஏற்படும் மாறுதலை கண்கூடாக காணலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவின் மருத்துவஇதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் நிறைய பழங்களும் காய்களும் சாப்பிடுங்கள். ஆறே வாரங்களில் உடலில் வனப்பும் மினுமினுப்பும் கூடும் என்று கண்டறிந்துள்ளனர். காய்கறிகள், பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கும் கரோட்டினாய்டுகளும் தாவர வேதிப் பொருட்களும் நம் உடலில் பொலிவும், கவர்ச்சியும் தரும் மாயாஜாலங்கள் செய்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வாழைத்தண்டு மருத்துவ குணம் (18/06/2013)
|
அழகைத் தக்க வைக்க டிப்ஸ் (18/06/2013)
|
நடைபயிற்சியால் கிடைக்கும் பயன்கள் (18/06/2013)
|
பெர்ஃப்யூம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை (17/06/2013)
|
ஆண்களுக்கான சிறந்த அடிவயிற்று உடற்பயிற்சிகள் (17/06/2013)
|
கண்ட மாத்திரையும் சாப்பிடாதீங்க கருவுக்கு ஆபத்து! (16/06/2013)
|
|
Published news: |
பூசணிக்காயின் பெருமை! (12/06/2013)
|
சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்க (12/06/2013)
|
உடற்பயிற்சியின் முக்கியத்துவம் (12/06/2013)
|
சிசேரியன் அதிகரிக்க காரணம் (11/06/2013)
|
அனைத்து நோய்களுக்கும் நிவாரணி: வாழைப்பழம் (11/06/2013)
|
வெர்ர்க அவுட்: ஸ்டெப் அப் (11/06/2013)
|


வாழைத்தண்டு மருத்துவ குணம்









