![]() |
இந்திய கடற்படை கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டது! அதில் ஒரு ராணுவ வி.ஐ.பி ! | ||
| [ வியாழக்கிழமை, 19 யூலை, 2012, ] | ||
போராட்டம் நடத்தி குன்னூரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை படையினரில் ஒருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர். (கடற்படையைச் சேர்ந்த ஸ்ரீமேவன் ரணசிங்கே, ரியர் அட்மிரல் தரத்திலுள்ள அதிகாரி. இலங்கை கடற்படையின் தலைமைச் செயலகத்தில், ப்ராஜெக்ட்ஸ் அன்டு பிளானிங் டிவிஷனில் பணிபுரிகிறார்.) இவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றி, இலங்கைக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை என்ற கேள்விக்கு புதிய பதில் ஒன்றும் உள்ளது. அது என்ன தெரியுமா? இந்தியக் கடற்படையின் வேகத் தாக்குதல் கப்பல் (fast attack craft), நேற்று இலங்கையின் திருகோணமலை துறைமுகத்தில் சென்று நங்கூரமிட்டுள்ளது. இந்தியக் கப்பலின் பெயர், செட்லட்.
செட்லட் கப்பலின் கமாண்டிங் ஆபீசர் லெப். கமாண்டர் நிதின் குப்தாவின் தலைமையில் கப்பல் இலங்கை சென்றுள்ளது. கப்பலில் மற்றொரு முக்கிய நபரும் உள்ளார். அடுத்த வாக்கியத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள்: இலங்கைக்கு ராணுவ ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ ஆலோசகர் (Indian Defence Adviser to Sri Lanka) கேப்டன் சுமீத் கபூரும், திருகோணமலை சென்றுள்ள கப்பலில் உள்ளார். இன்று காலை, திதின் குப்தா, சுமீத் குமார் ஆகிய இருவரும் கப்பலில் இருந்து இறங்கி, இலங்கை கடற்படையின் கிழக்கு கமாண்டர் ரியர் அட்மிரல் ஜயந்த் கொலம்பகேவை சந்தித்தனர். "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆனால், பல்வேறு விஷயங்கள் பற்றியும் கலந்தாலோசித்தனர்" என்கிறார் கடற்படை அதிகாரி நிஷந்த ரணதுங்க. இந்தியக் கடற்படை கப்பல், இலங்கை துறைமுகத்துக்கு வந்த காரணம் பற்றிய தகவல் எதையும் அவர் தெரிவிக்க விரும்பவில்லை என்பதனை இது நன்றாக எடுத்துக்காட்டுகிறது. இலங்கை சென்றுள்ள இந்தியக் கடற்படைக் கப்பல் செட்லட், 16 பிப்ரவரி 2009-ல் இந்திய கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட, �கார் நிக்கோபார்� ரகத்திலான கப்பல் ஆகும். பதிவு இலக்கம் T70. இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் தென் பிராந்தியத்தில் தளத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். கப்பலில் உள்ள வி.ஐ.பி இராணுவ அதிகாரி இலங்கையில் என்ன செய்ய இருக்கிறார் என்பது தொடர்ந்தும் பரமரகசிகயமாகப் பேணப்படுகிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா (26/05/2013)
|
ஜோர்தானில் மட்டக்களப்பு தமிழ் பெண் சுடப்பட்டாரா? (26/05/2013)
|
கிண்ணியாவில் 13 வயதுச் சிறுமியப் பலாத்காரம் செய்த 49 வயது நபர்! (26/05/2013)
|
தாயைக் கொன்று மகளைக் கற்பழித்த நபர் தப்பிச் செல்கையில் தடுக்கி விழுந்து மரணம்! (26/05/2013)
|
வற்றாப்பளை அம்மன் ஆலய வேப்ப மரத்திலிருந்து பால் வடியும் அதிசயம்! (25/05/2013)
|
இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகள்: சர்வதேச மன்னிப்புச் சபை! (25/05/2013)
|


சுவிஸ் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய தேர்த்திருவிழா









