web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

வவுனியா சிறைச்சாலைக்குள் விடுதலைப் புலிகளின் பங்கர்?

[ திங்கட்கிழமை, 02 யூலை, 2012, ]
வவுனியா சிறைச்சாலைக்குள்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் மூவரை தமிழ் அரசியல் கைதிகள் சிறைப் பிடித்து பின்னர் விசேட அதிரடிப் படையினர்புகுந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை அறிந்தது.

இச்சம்பவத்தினை தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி சந்தேக நபர்கள் உட்பட 303 பேரை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்தது சிறைச்சாலை நிர்வாகம்.

அதன் பின்னர் அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் முன்னாள் விடுதலைப் புலிகள் அங்கு பங்கர் ஒன்றை அமைந்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.

குறிப்பிட்ட பங்கரில் புலிகள் பல்வேறுபட்ட சட்டவிரோத பொருட்களை அங்கு சேமித்து வைத்திருந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதில் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

எது எவ்வாறாயினும் மேற்படி பொருட்கள் சிறைச்சாலையினுள் கொண்டு செல்லப்படுவதற்கும் குறிப்பிட்ட பங்கர் அமைக்கப்படுவதற்கும் சிறைச்சாலை காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியில்லாமல் இடம்பெற்று இருக்க முடியாது என்பது வெளிப்படை உண்மை.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்படும் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முதலில் சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர்.

சிறைச்சாலைக்குள் நடந்த அவமானங்களை மறைக்கும் நோக்கிலேயே சிறைச்சாலை அதிகாரிகளால் இவ்வாறான கட்டுக் கதைகளை அவிழ்ந்து விடுவதாக தெரிவிக்கப்படுகிறது

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
  வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!  (20/05/2013) 
  வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்   (20/05/2013) 
  யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !   (19/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)