web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நித்யானந்தா-ரஞ்சிதாவின் படுக்கையறை வீடியோ உண்மையே: லெனின் கருப்பன்

[ சனிக்கிழமை, 30 யூன், 2012, ]
நித்யானந்தா-ரஞ்சிதாவின்
நித்யானந்தாவின் படுக்கையறையில் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருந்த வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த வீடியோ போலியானது என்றும் மார்பிங் செய்திருக்கிறார்கள் என்றும் நித்யானந்தா மறுத்து வந்தார். மேலும் இதை வைத்து தன்னிடம் சிலர் கோடிக்கணக்கில் பணம் பறிக்க முயன்றதாகவும் புகார் கூறியிருந்தார்.

இதுகுறித்து கர்நாடக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ உண்மையானதா இல்லையா என்பதை அறிய அமெரிக்காவின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க தடயவியல் துறை தனது அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இந்த வீடியோ ஆதாரத்தை நித்யானந்தாவின் முன்னாள் சீடரான லெனின் கருப்பன் ரகசியமாக படம் பிடித்திருந்தார். அவர் இந்த அமெரிக்க தடயவியல் துறையின் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது;

அமெரிக்க தடயவியல் துறையின் அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானதுதான். மார்பிங் வேலைகள் எதுவும் செய்யப்படவில்லை.

மேலும் அந்த வீடியோ பதிவில் ரஞ்சிதா மட்டும் இல்லை. மேலும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் என்றும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையை கர்நாடகா சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறேன்.

எனக்கு நித்யானந்தா தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் எதற்கும் நான் அஞ்சமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013) 
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013) 
  ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது   (18/05/2013) 
  மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!   (18/05/2013) 
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013) 
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013) 
Published news:
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)
  மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா?  (12/05/2013)
  காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம்   (12/05/2013)
  மனைவியை நெரித்து கொன்று தூக்கில் போட்ட கணவன்   (11/05/2013)
  பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ கிளிப்பிங்குகளைக் காட்டிய பள்ளிக்கூட வேன்   (10/05/2013)
  பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய வேன் டிரைவர் கைது   (10/05/2013)