![]() |
உடல் வலிமை தரும் உடற்பயிற்சி | ||
| [ சனிக்கிழமை, 30 யூன், 2012, ] | ||
இன்றைய கணினி உலகில் யாருக்கு உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது? ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம் அல்லவா! இதோ உடல்வலியை போக்கி வலிமை தரும் ஒரு சிறிய உடற்பயிற்சி.
இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும்.
இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும். இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து ஆ….ஹ்! என்று சத்தமாகச் சொல்லவும்.
உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது. பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.
இதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பயனைப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை செய்வதால் உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும்.
மேலும் இந்த பயிற்சி கால்கள், முதுகு, தோள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|
திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை (21/05/2013)
|
காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் (20/05/2013)
|


மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!









