web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

உல்லாசத்துக்கு அடிக்கடி அழைத்ததால் ஆசிரியை கொலை : வாலிபர் பகீர் தகவல்

[ புதன்கிழமை, 27 யூன், 2012, ]
உல்லாசத்துக்கு அடிக்கடி
புதுக்கோட்டை: உல்லாசமாக இருக்க, அடிக்கடி வற்புறுத்தியதால் கொலை செய்ததாக, அறந்தாங்கி ஆசிரியை வானதி கொலை வழக்கில், கைதான வாலிபர் வாக்குமூலம்

அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி மனைவி வானதி, 48. கிளிவயல் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி டவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த இவர், கடந்த 24ம் தேதி நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். அறந்தாங்கி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளத்தொடர்பு தான் காரணம் என்பது தெரியவந்தது.

விசாரணை : இதையடுத்து, அவரது வீட்டுக்கு அடிக்கடி வந்துசென்ற வாலிபர்கள் குறித்த தகவலை போலீசார் திரட்டினர். இதில் சுனையக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் சரவணன், 33, அடிக்கடி வானதி வீட்டுக்கு வந்து சென்றுள்ளதும், அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றிவந்த சரவணனுக்கும், அதே பஸ்சில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை வானதிக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதன் மூலம் சரவணன் அடிக்கடி ஆசிரியை வானதி வீட்டுக்கு வந்துசெல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இதை வானதி, தன் மொபைல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியை வானதியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள தகவல், சரவணன் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

உல்லாசம் : வானதி வீட்டுக்கு செல்வதை சரவணன் குறைத்துள்ளார். இருந்தும் அவரை வானதி விடுவதாக இல்லை. மொபைல்போனில் தொடர்புகொண்டு வீட்டுக்கு அழைத்துள்ளார். அடிக்கடி உல்லாசமாக இருக்க விரும்பாத சரவணன், வேறுவழியின்றி வானதியை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 24ம் தேதி நள்ளிரவு கத்தி, பெல்ட், பிராந்தி பாட்டில் ஆகியவற்றுடன் வானதி வீட்டுக்குள் சென்ற சரவணன், அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு   (22/05/2013) 
  பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!   (22/05/2013) 
Published news:
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013)
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013)
  ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது   (18/05/2013)
  மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!   (18/05/2013)
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013)
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013)