![]() |
தினசரி 3 கப் காபி சாப்பிடுங்க அல்சீமர் வராதாம்! | ||
| [ செவ்வாய்க்கிழமை, 26 யூன், 2012, ] | ||
வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி சாப்பிட்டால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக அலர்ட்டாக இருக்குமாம். அவர்களுக்கு மூளை பாதிப்பு நோய் எனப்படும் அல்சீமர் நோய் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. விடியும் போதே சிலர் காபியில்தான் கண் விழிப்பார்கள். ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி காபி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம். வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சீமர் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
தேங்காய்: சத்துப் பட்டியல் (21/05/2013)
|
பூசணிக்காய் ஃபேஸ் பேக் (21/05/2013)
|
முதுமையில் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி (21/05/2013)
|
பளபளப்பான முகத்திற்கு ஏற்ற ஒயின் ஃபேஷியல்!!! (21/05/2013)
|
வீட்டு மருத்துவ குறிப்புகள் (20/05/2013)
|
மூளையைப் பாதுகாக்கும் உடற்பயிற்சி! (20/05/2013)
|
|
Published news: |
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! (16/05/2013)
|
பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்! (15/05/2013)
|
மூட்டு வலியா? (15/05/2013)
|
அழகான கன்னம் வேண்டுமா? (15/05/2013)
|
உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கியம் (15/05/2013)
|
சத்துப்பட்டியல்: பப்பாளி (14/05/2013)
|


தேங்காய்: சத்துப் பட்டியல்









