web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

மகிந்தவை பதவியிலிருந்து அகற்றினால் நீதிமன்றம் தண்டனை வழங்குவது சுலபம்!

[ செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல், 2012, ]
மகிந்தவை பதவியிலிருந்து
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தற்போதை இலங்கை ஜனாதிபதி மகிந்தவை பதவியிலிருந்து அகற்றினால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில்அவருக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணையின் மூலம் சர்வதேச நீதிமன்றம் அவருக்குரிய தண்டனையை வழங்குவது இலகுவாக இருக்கும். என கனடிய.

தமிழ் அரசியல் அவதானிகள் குழு தெரிவித்துள்ளது. இதை நாம் செய்வதற்கு ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு தேவையான பலமான அரசியல் கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டும்.

ஜனாதிபதி மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதும் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகவும் இருக்கும் என்றே நாம் கருதுகின்றோம். எனவே அதற்குரிய வேலைத்திட்டங்களில் இலங்கைக்கு உள்ளேயும் வெளிநாடுகளிலும் தமிழ் மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு கனடாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் அவதானிகள் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் தற்போதைய அவசரத் தேவை என்ற தலைப்பில் கலந்துரையாடப்பட்ட மேற்படி விடயம் தற்போது அறிக்கையான வெளிவந்துள்ளது. மேற்படி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜனாதிபதி மகிந்தவும் அவரது சகாக்களும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொன்றழித்தவர்கள் என்பதை உலகமே அறியும்.

அத்துடன் இன்றும் இன்னமும் அந்த நாட்டில் கடத்தல்களும், கொலைகளும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இவ்வாறான அடக்குமுறையும் அட்டகாசமும் நிறைந்த மகிந்தவின் ஆட்சியை நீடிப்பது என்பது இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

இலங்கையில் தொடர்ந்தும் மகிந்தவின் ஆட்சியில் அவரது சகோதரர் கோத்தபாய ஒரு சர்வதிகாரியாகவே செயற்பட்டு வருகின்றார். அங்கு அரசியல் நியாயம் கேட்கும் பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள் அல்லது கொன்றழிக்கப்படுகின்றார்கள்.

எனவே மகிந்த ராஜபக்சவை ஆட்சியை விட்டு அகற்றவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளிலும் உலகத்தின் எந்த மூலையில் வசித்தாலும் தமிழ் மக்கள் அனைவரும் உடனடியாக ஈடுபட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
  வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!  (20/05/2013) 
Published news:
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)
  நான்கு வயது சிறுவன் மூலம் பாலியல் திருப்தி பெற்ற 59 வயது பெண் கைது   (13/05/2013)
  வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி!   (12/05/2013)