web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கண்டி, ரம்புகேவெல என்னுமிடத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்த பெண்

[ வெள்ளிக்கிழமை, 09 மார்ச், 2012, ]
கண்டி, ரம்புகேவெல என்னுமிடத்
v
குடும்ப கட்டுப்பாட்டு ஊசி ஏற்றிய 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவர் ஊசி ஏற்றி சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று கண்டி, ரம்புகேவெலஎன்னுமிடத்தில் இடம்பெற்றது.

கண்டி, ரம்புக்கேவெல பிரதேசத்தை சேர்ந்த இனோகா ரூபசிங்க என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இப்பெண் நேற்று வியாழக்கிழமை, ரம்புக்கேவெல சுகாதார நிலையத்திற்கு சென்று குடும்ப கட்டுப்பாட்டு ஊசி ஏற்றியுள்ளதுடன் இவ்வூசியை ஏற்றி சில நிமிடங்களில் மயக்கமடைந்துள்ளார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் சம்பந்தமாக அங்கும்புரை பொலிஸார் விசாரணை நடத்துவதுடன் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

இதேவேளை அவரது குடும்பத்தினர் இச்சம்பவம் சம்மந்தமாக கடும் எதிர்ப்பை தெரிவிப்பதுடன் ஊசி விசமானதாலேயே இம் மரணம் எற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.மேலதிக விசாரணைகளை அங்கும்புரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து