web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

நன்நடத்தையால் விடுதலையாகி மீண்டும் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவன் கைது

[ திங்கட்கிழமை, 14 சனவரி, 2013, ]
நன்நடத்தையால் விடுதலையாகி
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்தவன் சுனில் சுரேஷ் (32). கடந்த 2002-ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள சினார் பகுதியில் வசித்து வந்த சிறுமியை கற்பழித்து கொலை செய்த குற்றத்துக்காக விசாரணை நீதிமன்றம் இவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில், சுனில் சுரேஷ் மேல்முறையீடு செய்ததன் பேரில், மரண தண்டனையை 17 வருட கடுங்காவல் தண்டனையாக குறைத்து நீதிபதி உத்தரவிட்டார். நாசிக் சிறையில் தண்டனை அனுபவித்த வந்த அவனை, கடந்த ஆண்டு மே மாதம் நன்நடத்தையை காரணம் காட்டி சிறை நிர்வாகம் விடுதலை செய்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி, ஷிர்டி ரெயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் பிணத்தை போலீசார் கைப்பற்றினர். பிரேத பரிசோதனையில், அந்த சிறுமி கற்பழிக்கப்பட்ட பின்னர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது. குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

நாசிக் அருகே உள்ள மன்மட் ரெயில் நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த சுனில் சுரேஷை போலீசார் பிடித்து விசாரித்தபோது 9 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற பின்னர், பிணத்தை ஷிர்டி ரெயில் நிலையம் அருகே வீசியதை அவன் ஒப்புக்கொண்டான். இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அவன் மீதான வழக்கின் விசாரணையை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி, மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை   (21/05/2013) 
  புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்!   (21/05/2013) 
  உறவினர் திருமணத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி   (21/05/2013) 
  வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்   (20/05/2013) 
  தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை   (20/05/2013) 
  வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது   (20/05/2013) 
Published news:
  டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம்   (15/05/2013)
  இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்!   (15/05/2013)
  ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது   (14/05/2013)
  ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்   (14/05/2013)
  4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது   (14/05/2013)
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)