![]() |
பஞ்சாபில் பெண்ணொருவர் 7 பேரால் வல்லுறவு: இந்தியாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம் | ||
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி, 2013, ] | ||
இந்தியாவின், டெல்லியில் இடம்பெற்ற வல்லுறவு சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பே பஞ்சாபில் திருமணமான இளம்பெண்ணை பஸ் சாரதி, நடத்துனர் உள்பட 7 பேர் சேர்ந்து வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது. பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 29 வயது இளம்பெண் ஒருவர் குக்லாவில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு பஸ்ஸில் சென்றார். சாரதி தாலர் சிங் அப்பெண்ணை குக்லா நிறுத்தத்தில் இறக்கிவிடவில்லை. இதையடுத்து பேருந்தை நிறுத்துமாறு அப்பெண் நடத்துனர் ரவியை கெஞ்சியும் பலனில்லை. வேறு ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய தாலர் சிங், ரவியுடன் சேர்ந்து அப்பெண்ணை மோட்டார் சைக்கிளில் வைத்து குர்தாஸ்பூர் அருகே உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தாலர் சிங் மற்றும் ரவியுடன் சேர்ந்து மேலும் 5 பேர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். பின்னர் அவரை நேற்று காலை குக்லா அருகே விட்டுச் சென்றனர். இதையடுத்து அப்பெண் இந்த சம்பவம் குறித்து கனுவான் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வல்லுறவு வழக்குப் பதிவு செய்த பொலிஸா தாலர் சிங், ரவி, ஜஸ்விந்தர் சிங், ஜக்ப்ரீத் சிங், சத்வந்த் சிங் உள்பட 6 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். திருமணமான இளம்பெண் ஒருவர் 7 பேரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! (22/05/2013)
|
செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு (22/05/2013)
|
பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை! (22/05/2013)
|
பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம் (22/05/2013)
|
காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் (22/05/2013)
|
தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை (21/05/2013)
|
|
Published news: |
10 வயதுச் சிறுமியை கற்பழித்த 71 வயது மாந்திரீகர் (16/05/2013)
|
50 வயது அண்ணியை கற்பழித்த 30 வயது கொழுந்தன்! (16/05/2013)
|
பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை கைது (16/05/2013)
|
நான்கு மனைவிகள் கட்டி வாழ முடியாத நபர், பெற்ற தாயுடன் தற்கொலை!! (16/05/2013)
|
டாஸ்மாக் கடையில் 'சைட் டிஷ்' சண்டை… முந்திரிக் காட்டில் கொலையில் முடிந்த பரிதாபம் (15/05/2013)
|
இந்தியாவின் முதல் பெண் ஜவான் தூக்கில் பிணமாகத் தொங்கினார்! (15/05/2013)
|


மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!









