மட்டக்களப்பில் 17 வயதான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

August 6, 2008

viyapu.comமட்டக்களப்பில் பெண் ஒருவர், தமது 17 வயதான மகன் வீட்டில் இருந்து வெளியே சென்றதன் பின்னர் வீடு திரும்பவில்லை என மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு புத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கிரிசாந் என்பவரே காணாமல் போனவராவார்.

கிரிசாந் என்னும் இளைஞர் ஊரணி அமரிக்கன் மிசன் தொழில்நுட்பக் கல்லூரியில் தச்சுவேலையில் பயிற்சி பெற்று வருபவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bottom