சிராட்டிகுளம் நோக்கிய நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிப்பு.

June 20, 2008

மன்னார் பெரியமடுவிலிருந்து சிராட்டிகுளம் நோக்கிப் பெருமெடுப்பில் மேற்கொண்ட சிறிலங்காப் படையினரின் முற்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
இத் தாக்குதலில் பலத்த உயிர் இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர்.

ஆயுதங்கள் சில விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை 4.00 மணியளவில் பின்புலத்தில் இருந்து பலத்த எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் இந்த முன்நகர்வினை மேற்கொண்டனர். இந்த முயற்சியினை எதிர்த்து விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தினர்.

இறுதியாக ஆயுதங்களையும் கைவிட்டுப் படையினர் பின்வாங்கினர்.

இத் தாக்குதலில் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதவிபரங்கள் வருமாறு.

ரி 56 துப்பாக்கி – 02

ஏ.கே ரவைகள் – 630

நடுத்தர ரவைகள் – 1750

குண்டுகள் – 02

மண்வெட்டி

கத்தி – 01

கோல்சர் – 01

வெற்றுப்பைகள் – 30

மழைக்கவசம் – 01

ரவைக்கூடுகள் – 04

தறப்பாள் – 01

என்பன விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Bottom